என்று காற்றுத் திரையில் மிதந்து கொண்டிருந்த அந்த செவ்வக பெட்டிக்குள் எழுதி, அதே திரையில், பக்கத்தில் இருந்த 'விவரம்' என்றதை தொட்டேன்.
'In-Transit : Despatched from Delhi' என்பது 489வது தடவையாக என் கண்களில் எரிச்சலூட்டியது.
பொறுமை செத்துப் போய் எனது இன்டர்காமை இயக்கினேன்.
"சொல்லுங்க சார்" என்றது எதிர்முனை.
"உடனே என் கேபினுக்கு வா" சொல்லிவிட்டு தொடர்பை துண்டித்த 52வது செகண்டில் என் கேபினுக்கு வந்து விட்டான்.
"வா அன்பு. ஒரு பார்சல் அனுப்பினேன். இன்னும் போய்ச் சேரலை. அதான் உன்னைக் கூப்பிட்டேன்.". அன்பு - எங்கள் கம்பெனியின் கூரியர் டிபார்ட்மென்ட் இன்சார்ஜ்.
"எதுல அனுப்புனீங்க?"
"நேனோவிங்ஸ்"
"கொஞ்சம் பொறுங்க. நேனோவிங்ஸ் ஆளைப் பிடிக்கலாம்" என்றபடியே தன் 'அட்ரஸ்பாட்'ஐ விரித்து எதையோ தேடினான்.
மூலையில் இருந்த என் ஃபோனை அணுகி ஒரு நம்பரை ஒற்றி, தொடர்புக்கு காத்திருக்கையில்,
"நீங்க மைக்ரோ ஃபிளைட்ஸில் அனுப்பியிருக்கலாமே. எந்த ஊருக்கு அனுப்புனீங்க?"
"பணங்குடி. திருநெல்வேலிக்கு பக்கத்தில...."
"அங்க அவனுங்களுக்கு சர்வீஸ் இருக்காதோ?"
இதற்கு நான் பதில் சொல்ல வேண்டுமா என்று யோசித்து கொண்டிருக்கையில் தொடர்பு கிடைத்துவிட்டது.
"ஹலோ, நான் VEல இருந்து அன்பு பேசறேன். ஒரு பார்சல் அனுப்புனது, இன்னும் போய் சேரலை. என்னாச்சுன்னு தெரியனும்."
"பி.ஓ.டி நம்பரா? ஒன் செகண்ட்", அன்பு என்னைப் பார்க்குமுன் அந்தக் காகிதத்தை அவன் கண்களுக்கு நேராகப் பிடித்தேன்.
"C..டபிள் ஒன்.. சிக்ஸ்.. டபிள் நைன் டபிள் செவன் ஸீரோ.. B"
"அப்படியா? எப்ப போய் சேரும்?"
"என்ன சார் இப்படி பதில் சொல்றீங்க? யார்ட்ட கேட்டாத் தெரியும்?"
"நம்பர் கொடுங்க. நான் பேசறேன்." மறுமுனையில் கேட்ட எண்ணை குறித்து கொண்டான்.
"இவன் என்ன சொல்றான்னா, டெல்லில இருந்து அனுப்பியாச்சாம். அங்க எப்பப் போய்ச் சேரும்னு தெரியாதாம். அதான் யார்ட்ட கேட்டா தெரியும்னு கேட்டேன். ஒரு நம்பர் குடுத்து அவர்கிட்ட கேளுங்கன்றான்."
"டெல்லில இருந்து அனுப்பியாச்சுங்கறது, எனக்கு நீ சொல்லித்தான் தெரியனுமா? அதான் அவன் 'ஸைட்'லயே போட்டிருக்கானே, டெஸ்பாட்ச்ட் ஃப்ரம் டெல்லின்னு. அனுப்பி இவ்வளவு நேரமாகியும் அங்க போய் சேரலைன்னுதானே உன்னைக் கூப்பிட்டேன்." எனக்கு கொஞ்சம் கோபம் வந்தது.
நான் சொன்ன பிறகுதான் திரையை பார்த்தான். "பாரு எப்ப டெஸ்பாட்ச் ஆயிருக்கு? இன்னும் போய் சேரலை!"
"என்ன அனுப்பினீங்க? ஏதாவது முக்கியமானதா?"
"அது.... இன்னைக்கு என் வைஃபோட பர்த்டே. இப்போ ஊர்ல இருக்கா. அதான் அவளுக்கு ஒரு கிஃப்ட் அனுப்பினேன். ஆனா கூரியர்காரன் இப்படி சொதப்புறான்."
"அடப் பாவமே! நீங்க எங்கிட்ட குடுத்திருந்தீங்கன்னா, நான் மைக்ரோ ஃபிளைட்ஸ்ல அனுப்பியிருப்பேனே! மைக்ரோ ஃபிளைட்ஸ்னா, நமக்கு நிறைய ஆள் இருக்கு. நம்ம கம்பெனியோட சர்வீஸ் பூரா அவுங்கதானே பாக்கிறாங்க. அதுனால, ஏதாவது அனுப்புனா, அது எங்க இருந்தாலும் ட்ராக் பண்ணிரலாம். நேனோ விங்ஸ்ல அவ்வளவா பழக்கம் இல்லை. இனிமே எதாவது அனுப்புறதா இருந்தா எங்கிட்ட குடுங்க."
"சரி. இப்ப இதுக்கு என்ன பண்றது? ஏன் இவ்வளவு லேட் ஆகுது?"
"இருங்க. இந்த நம்பருக்கு ட்ரை பண்ணலாம்" என்றபடியே அதை ஒற்றினான்.
மீண்டும் அதே வழக்கமான ஆரம்ப உரையாடல்கள். அதற்கப்புறம்,
"டெல்லில இருந்து டெஸ்பாட்ச் ஆய்ருச்சு சார். அது எனக்கு உங்க சைட்லயே தெரியுது. இப்ப பார்சல் எங்கே இருக்கு? இவ்வளவு நேரமா அங்க ரிசீவ் ஆகுறதுக்கு?"
"ஓ!"
"அப்படியா?"
"இன்னும் எவ்வளவு நேரத்துல எக்ஸ்பெக்ட் பண்ணலாம்? ஏன்னா, கொஞ்சம் அர்ஜெண்ட்."
"ஓகே. நான் இன்னும் பதினைஞ்சு நிமிஷத்துல கூப்பிடறேன்." தொடர்பை துண்டித்தான்.
"என்ன சொல்றான்னா, அவங்களுக்கு பணங்குடிக்கு சர்வீஸ் கிடையாதாம்..."
"என்னது? ஆனா நான் இதுக்கு முன்னாடி நிறைய தடவை அனுப்பியிருக்கேனே?!"
"அதான், அவனுக்கு சர்வீஸ் கிடையாதாம். திருநெல்வேலிக்குத்தான் சர்வீஸாம். பார்சல் இப்ப திருநெல்வேலிலதான் இருக்காம். அங்க(இ)ருந்து இவன் மைக்ரோ ஃபிளைட்ஸ்லதான் பணங்குடிக்கு அனுப்புவானாம். இவன் ஆஃபீஸ்லயிருந்து, மைக்ரோ ஃபிளைட்ஸ் ஆஃபீஸுக்கு போறதுக்குத்தான் இப்ப லேட் ஆவுது. அதான் அர்ஜெண்ட்னு சொன்னேன். பத்து நிமிஷத்துல அனுப்பிற்றேன்னு சொன்னார். ஒரு பதினைஞ்சு நிமிஷம் பார்ப்போம்." என்று சொல்லிவிட்டு அவன் வேலையை பார்க்கப் போனான்.
கொஞ்சம் எரிச்சலாயிருந்தது. இரண்டு நிமிடங்களுக்கு ஒரு முறை நேனோவிங்ஸின் வலைத்தளத்தை புதுப்பித்தேன். கொஞ்சம் முன்னேற்றமாய் 'Arrived at Tirunelveli - Route' என்பதும் நேரத்தோடு பதிவு செய்யப்பட்டிருந்தது.
எட்டாவது நிமிடம் - என் மனைவியிடமிருந்து அழைப்பு வந்தது.
எடுத்ததுமே, "தாங்க்யூ செல்லம்." சிணுங்கினாள்.
"வந்துருச்சா?"
"ம்ம். இப்பத்தான் வந்தது. பிரிக்கக் கூட இல்லை. முதல்ல உங்களுக்கு போன் பண்ணிரலாம்னு........" அரை மணி நேரம் பேசிவிட்டு லைனை கட் செய்தேன்.
இன்னும் எனது திரையில் நேனோவிங்ஸின் தளம்தான் விரிந்திருந்தது. ஒருமுறை அதை புதுப்பித்தேன். இப்பொழுது டெலிவரி விவரங்களும் அதில் வந்து விட்டன. எல்லா விவரங்களின் நேரத்தையும் பார்த்தேன்.
'In-Transit : Despatched from Delhi _______________________29-Feb-2080 11:18 am'
'Arrived at Tirunelveli - Route____________________________ 29-Feb-2080 11:23 am'
'Sent to Link Courier Service - No Direct Service ____________29-Feb-2080 11:25 am'
'Despatched from Link Courier __________________________29-Feb-2080 11:28 am'
'Consignment Delivered - Recd. Ackt. from Link Courier ______29-Feb-2080 11:33 am'
"சே! ஒரு பார்சலை அனுப்ப இந்த கூரியர்காரங்களுக்கு இவ்வளவு நேரமா?"
Wednesday, March 05, 2008
Subscribe to:
Post Comments (Atom)
9 comments:
:)):))
சூப்பர் யோசிப்பவர்.
இதே மாதிரி டி.எச்.எல் இன் கொரியர் சர்விசில் கடந்த மாதம் முழுதும் அதன் வெப்சைட்டை ரிப்ரஷ் செய்து கொண்டே இருந்தேன். உங்கள் கதையைப் போல் சடுதியில் அல்லாமல் 15 நாட்கள் எடுத்துக்கொண்டது.
//உங்கள் கதையைப் போல் சடுதியில் அல்லாமல் 15 நாட்கள் எடுத்துக்கொண்டது.
//
எனக்குப் பரவாயில்லை. இரண்டு நாள்தான் ஆனது(டி.எச்.எல் இல்லை)!!!;-)
ஆஹா, டெலிபோர்டேஷன் இல்லாத கடந்த காலம் போலிருக்கே!
//ஆஹா, டெலிபோர்டேஷன் இல்லாத கடந்த காலம் போலிருக்கே//
கரெக்டா புரிஞ்சுகிட்டீங்களே!!;-)
அக்சுவலா, இந்தக் கதையின் கடைசி வாக்கியத்தை,
"சே! டெலிடிரான்ஸ்போர்டிங்கில் ஒரு பார்சலை அனுப்ப இந்த கூரியர்காரங்களுக்கு இவ்வளவு நேரமா?"
- என்றுதான் எழுதியிருந்தேன். மறுவாசிப்பு செய்தபொழுது அந்த ஒரு வார்த்தை இல்லாமலிருந்தால் இன்னும் நன்றாயிருந்ததால் அதை எடுத்து விட்டேன்!!!;-)
நல்லாருக்குங்க இந்தக் கதை.
கம்பெனியோட கூரியர் சர்வீஸ் முழுவதும் "மைக்ரோ ஃபிளைட்ஸ்" தான் பார்க்கறாங்க அப்படின்னா அவங்ககிட்டயே பார்சலைக் கொடுத்திருக்கலாமே. கம்பெனியில் வேலை செய்யும் ஒருவருக்கு கூரியர் சர்வீஸ் போன்ற சின்னச் சின்ன விஷயங்கள் பற்றி நிச்சயம் தெரிந்திருக்கும். இல்லையேல் யாரிடமாவதாவது விசாரித்தாவது இருப்பார்.
இந்த ஒரு விஷயம் மட்டும் தான் நெருடல். மத்தபடி பின்னிருக்கீங்க. சூப்பர் ;-))
சகாரா,
//கம்பெனியோட கூரியர் சர்வீஸ் முழுவதும் "மைக்ரோ ஃபிளைட்ஸ்" தான் பார்க்கறாங்க அப்படின்னா அவங்ககிட்டயே பார்சலைக் கொடுத்திருக்கலாமே. //
பொதுவாக நான் எனது பர்சனல் கூரியர்களை, அலுவலக கூரியர் டிபார்ட்மென்ட் மூலம் அனுப்புவதில்லை. முக்கிய காரணம் - அவர்கள் அனுப்பும் கூரியருக்கு ரிமோட் ஏரியாக்களில் சர்வீஸ் இருப்பதில்லை.
இந்தக் கதையின் பெரும்பகுதி உரையாடல்கள், வெவ்வேறு சந்தர்ப்பங்களில், எனது அலுவலகத்தில், சமீபத்தில் நிகழ்ந்தவை. அவற்றுக்கு கொஞ்சூண்டு விஞ்ஞான முலாம் பூசியிருக்கிறேன். அவ்வளவுதான்!!;-)
//இந்தக் கதையின் பெரும்பகுதி உரையாடல்கள், வெவ்வேறு சந்தர்ப்பங்களில், எனது அலுவலகத்தில், சமீபத்தில் நிகழ்ந்தவை. அவற்றுக்கு கொஞ்சூண்டு விஞ்ஞான முலாம் பூசியிருக்கிறேன். அவ்வளவுதான்!!;-)//
ம்ம்... அப்ப ஓகே.
seconds போட்டிருந்திருக்கலாம்.. இன்னும் நல்லா இருந்திருக்கும்
சூப்பர். இதுல நீங்க நடக்கறதா சொல்றதை இப்பவே நான் என் கணவர் மூலமா அனுபவப்பட்டுட்டேன்.
Post a Comment