Wednesday, September 19, 2007

ஆறு வார்த்தைகளில் கதை - "அறை எண் 305இல்

யார் தங்கியிருக்கிறார்கள்?"

"பத்ரின்னு ஒருத்தர். மனுஷன்னு நினைக்கிறேன்."

12 comments:

Anonymous said...

சூப்ப்ப்ப்பர்ர்ர்ர்!

கூமுட்டை said...

தல,
புரியலையே. :-(

நளாயினி said...

அடடாh. இப்படியுமா.

வவ்வால் said...

யோசிப்பவர்,

சுஜாதா முன்னர் ஒரு வரிக்கதை எழுதும் போட்டி விகடனில் கற்றதும் பெற்றதுமில் வைத்தார் அதன் பாதிப்பா?
அதில் வந்த ஒரு கதை,

உலகத்தின் கடைசி மனிதன் விரக்தியில் 20 ஆம் மாடியில் இருந்து குதிக்க தயாரானான் (குதித்து விட்டானா?), அறையில் தொலைப்பேசி அடித்தது!

கதை இப்படி தான் இருக்கும் ஆனால் அதே வார்த்தகள் இல்லை.

RATHNESH said...

நன்று. வாழ்த்துக்கள்.

கதை நிகழ்ந்த இடம் பெங்களூரா?

RATHNESH

நளாயினி said...

http://www.wired.com/wired/archive/14.11/sixwords.html

நாங்கள் முத்தமிட்டுக்கொண்டோம். அவள் உருகிவிட்டாள். துடைப்பம் கொடுங்களேன்! - ஜேம்ஸ் பாட்டிரிக் கெல்லி

We kissed. She melted. Mop please! - James Patrick Kelly

*******

கணிப்பொறி, பாட்டரி எடுத்துக் கொண்டு வந்தாயா? கணிப்பொறி?
- எயிலீன் கன்

Computer, did we bring batteries? Computer? - Eileen Gunn

*******

நான் பார்த்துட்டேன் செல்லம், ஆனாலும் பொய் சொல்லு. - ஆர்சன் ஸ்காட் கார்ட்

I saw, darling, but do lie. - Orson Scott Card

*******

பற்றி எரியும் கட்டிடங்களில், அவர்களுக்கு சிறகு முளைத்தது - க்ரெகரி மாகுவையர்

From torched skyscrapers, men grew wings. - Gregory Maguire

யோசிப்பவர் said...

நன்றி prakash

//தல,
புரியலையே. :-(
//
கூமுட்டை, உங்களுக்கு என்ன புரிகிறதோ, அதுதான் கதை!

//அடடாh. இப்படியுமா.
//இருக்கலாம் நளாயினியக்கா!

யோசிப்பவர் said...

வவ்வால்,
//சுஜாதா முன்னர் ஒரு வரிக்கதை எழுதும் போட்டி விகடனில் கற்றதும் பெற்றதுமில் வைத்தார் அதன் பாதிப்பா? //
இவ்வளவு லேட்டாவா பாதிக்கும்?;-)

//அதில் வந்த ஒரு கதை,

உலகத்தின் கடைசி மனிதன் விரக்தியில் 20 ஆம் மாடியில் இருந்து குதிக்க தயாரானான் (குதித்து விட்டானா?), அறையில் தொலைப்பேசி அடித்தது!

கதை இப்படி தான் இருக்கும் ஆனால் அதே வார்த்தகள் இல்லை.
//

இது போல் ஆங்கிலத்தில் நிறையவேயிருக்கிறது! ஒரு வார்த்தை கதையிலிருந்து 2048 வார்த்தைகள் கதை வரை இந்த தளத்தில் கிடைக்கிறது(ஏற்கனவே பார்த்திருந்தால் பொறுத்துக் கொள்ளுங்கள்). மேலும் நளாயினி அவர்களும் நிறைய ஆறு வார்த்தை ஆங்கில கதைகளை பின்னூட்டத்தில் தொகுத்தளித்திருக்கிறார். இது போன்றவற்றை பார்த்து உந்துதல் என்று சொன்னாலும், சமீபத்தில் கதை எழுத ஆரம்பித்திருக்கும் நண்பர் நிலாரசிகனின் ஒரே அலை வரிசையும் ஒரு முக்கியமான காரணம்.

யோசிப்பவர் said...

சுட்டி கொடுத்ததற்கு நன்றி நளாயினி அக்கா! இது வரை, இதை நான் படிக்கவில்லை!;-)

யோசிப்பவர் said...

//நன்று. வாழ்த்துக்கள்.
//
நன்றி RATHNESH


//கதை நிகழ்ந்த இடம் பெங்களூரா?//
ஏன் அப்படி?

சின்னப் பையன் said...

சுருண்டு விழுந்தான். இவ்வளவு அறை(யை) தாங்கினதே அதிசயம்தான்!!!

யோசிப்பவர் said...

Boochandi
//
சுருண்டு விழுந்தான். இவ்வளவு அறை(யை) தாங்கினதே அதிசயம்தான்!!!
//

அட, அசத்தறீங்களே!