Monday, August 13, 2007

சிவாஜி

"இன்னைக்கு சிவாஜின்னு ஒரு பழைய படம் பார்த்தேன்"

"யார் நடிச்சது?"

"அந்த காலத்துல சூப்பர் ஸ்டார்னு பேர் வாங்கினாரே! ரஜினிகாந்த்! அவர்தான் ஹீரோ!"

"ஒனக்குன்னு கெடைக்குது பார்! எங்கடா தேடிப் பிடிக்கிற?"

"என்னோட ரோபோதான் இந்த வாரம் இதைக் குடுத்துச்சு. 'ரோபோ'ன்னே ஒரு படம் இருக்கு. அதை அடுத்த வாரம் எடுத்து தர்றேன்னு சொல்லியிருக்கு. நான் சொல்ல வந்த விஷயமே வேற."

"என்ன? சொல்லித்தொலை!"

"இந்த சிவாஜி படத்துல, ஹீரோ அமெரிக்காவுல சம்பாதிச்சுட்டு, அதை இங்க வந்து நல்ல வழியில மக்களுக்கு பயன்படுற மாதிரி, ஹாஸ்பிடல், காலேஜ், ஸ்கூல்னு க்ட்ட நினைக்கிறார்."

"அமெரிக்காவுல சம்பாதிச்சுட்டு இங்க வர்றாரா? நல்ல காமெடி! இங்க சம்பாதிச்சதை அமெரிக்காவுல போய் செலவு பண்ணாலாவாவது ஒரு லாஜிக் இருக்கும்."

"டேய், அந்த நேரம் அமெரிக்கா ரொம்ப வளமையா இருந்தது. அப்பெல்லாம் இங்க இருந்துதான் சம்பாதிக்க அமெரிக்கா போவாங்க. நான் சொல்ல வந்தது அதுவும் இல்லை."

"இன்னும் நீ மேட்டருக்கே வரலையா?"

"ஹீரோ இந்த ஹாஸ்பிடல், காலேஜ், இதெல்லாம் கட்ட நினைக்கிறார்னு சொன்னேன்ல. இதெல்லாம் கட்டறதுக்கு அவர் எவ்வளவு சம்பாதிச்சுட்டு வந்திருப்பார்னு நினைக்கிறே?"

"எவ்வளவு?"

"வெறும் 250 கோடி"

"ஹேய்! தேர் இஸ் லிமிட் ஃபார் ஜோகிங் மேன். இப்ப இதை வச்சு ஒரு கார் கூட வாங்க முடியாது!!!"

5 comments:

Anonymous said...

hmmm!rajini valaga
rajini veriyan

தென்றல் said...

ha..ha.. :)

இரசித்தேன்!

munna said...

cool

Anonymous said...

cool..

padicha vudane chumma adirudille..

மாசிலா said...

//வெறும் 250 கோடி"

"ஹேய்! தேர் இஸ் லிமிட் ஃபார் ஜோகிங் மேன். இப்ப இதை வச்சு ஒரு கார் கூட வாங்க முடியாது!!!"//

அது இன்னா காருபா? இம்மாம் வெல?
ஓஹோ, இதாலியன் ஃபெராரியா?

ஆமாம் யோசிப்பவரே! இன்னா இம்மாம் காலம் கழிச்சி யோசிக்கிறீங்க? இப்ப இது பழைய மேட்டரு ஆயிடுச்சியா.

பரவாயில்ல, ரஜினி டங்கு வார கிழிக்கறதுக்கு எப்பவுமே லேட் இல்ல.