Thursday, July 20, 2006

இறந்தால் வா

"ஹல்லோ சுரேஷ்!"

"ஹாய் மகேஷ்!"

"உனக்கு டிரான்ஸ்ஃபர் போடுறாங்க போல?!?!"

"ஆமடா! எனக்கு அங்க போகவே பிடிக்கலை"

"ஏன்?"

"ஓவர் வெயிலு, தண்ணி கஷ்டம் வேறயாம், சாப்பாடு கூட நல்ல சாப்பாடு
கிடைக்குமோ கிடைக்காதோ?! நினைச்சாலே எரிச்சலா வருது!!"

"அப்ப போக மாட்டேன்னு சொல்ல வேண்டியதுதானே"

"அது எப்படி முடியும்? ஈ.டி.ஆர். ஆர்டர் போட்டா அந்த கடவுளே கூட மாத்த
முடியாதே!!"

"அது என்னவொ சரிதான். நம்ம சி.ஜி. உனக்கு நல்ல குளோஸ்தானே? அவர்ட்ட சொல்லி எதாவது பண்ண முடியுமான்னு பாக்க வேன்டியதுதானே."
"என்னதான் என்கூட நல்லா பழகுனாலும், இந்த விஷயத்துல அவர் ரொம்ப
ஸ்ட்ரெய்ட் ஃபார்வர்ட்."

"அங்க நீ எத்தன வருஷம் இருக்கனுமாம்?"

"60.2"

"ஓ! ஸோ லாங்க் டைம்"

"ஆனாலும் பாவம் நீ. இங்கே சொர்க்க வாழ்க்கை வாழ்ந்துட்டு, அங்கே போய் நாய் பொழைப்பு பொழைக்க போறே"

"இதெல்லாம் கூட பரவாயில்லை. அங்கே போனபிறகு, இங்க இருக்குற
யாரையுமே காண்டாக்ட் பண்ண முடியாது. அதை நினைச்சா தான்
வருத்தமா இருக்கு"

"ஆனா அங்கே போய் உன் திறமைய கரெக்டா காட்னா, இங்கே திரும்பி
வந்ததும் பிரோமொஷன் கிடைக்கும். நிறைய பேர் அங்க போய்ட்டு வந்து எஸ்.பி. ஆயிருக்காங்க. நம்ம சுந்தர்! சிவாவுக்கு எவ்ளோ குளோஸ் அயீட்டாரு. அப்பர்தான் அங்கே கொஞ்சம் கஷ்டபட்டார். ஆனாலும் திரும்பி வந்ததும் இப்ப எப்படியிருக்கார் பார்த்தியா?"

"ஆனா, அங்க போய் PPV ஆனவஙதான் ஜாஸ்தி. அதோட கம்பேர் பண்ணா,
சுந்தர், அப்பர்ன்னு ரொம்ப கம்மியானவங்கதான் பதவிய வாங்கியிருக்காங்க! கடைசியா பிரமோஷன் கிடைச்சது யாருக்கு? கொஞ்சம் யோசிச்சு பாரு. நம்ம தெரசாதான் கடைசி. தெரசாவுக்கு முன்னாடி? அந்தளவுக்கு நம்மால செய்ய முடியுமா?!?!"

"கஷ்டம்தான்."
"எப்ப கிளம்பற?"

"நாளைக்கு காலைல 5:25:432க்கு"

"போறதுக்கு முன்னாடி இங்க இருக்கற ஹையர் அதாரிடீஸ் எல்லாரையும் ஒரு தடவை நேர்ல போய் பாத்துரு. அதான் நம்ம சிவன், எமதர்மராஜா, சித்திர குப்தன்..."

"கண்டிப்பா பாக்கணும்"

"பெஸ்ட் ஆஃப் லக்!!!"

"தேங்க்ஸ்டா"

ஆர்யா ஹாஸ்பிடல். டாக்டர் இந்துமதி ஆப்பரேஷன் தியேட்டரிலிருந்து வெளியே வந்தாள். முகமூடி பாதி கழன்ற நிலையில் கழுத்தில் தொங்கிகொண்டிருந்தது.வாசலில் நின்று கொண்டிருந்த காவ்யாவின் அம்மாவிடம் சிரித்தபடி சென்று,

"ஆபரேஷன் நல்லபடியா முடிஞ்சுது. நர்ஸ் குழந்தைய குளிப்பாட்டிட்டு இப்ப கொண்டு வந்துருவாங்க! இன்னும் அரைமணினேரம் கழிச்சு உங்க பொண்ணை போய் பார்க்கலாம். மயக்கத்துல இருக்காங்க, டிஸ்டர்ப் பண்ணாதீங்க."

"டாக்டர்! குழந்தை பிறந்த நேரம்?..."

"ஓ! ஜாதகம் கணிக்கணும்ல? மறுந்துட்டேன். சரியா அஞ்சு இருபத்தி அஞ்சு, நாலு செகன்டுக்கு பொறந்ததும்மா."

12 comments:

கோவி.கண்ணன் said...

மிகப்பெரிய யோசனையாகவும், ஆழ்ந்த யோசனையாகவும் இருக்கிறது.. அது சரி எப்படி இப்படியெல்லாம் யோசிக்கிறீர்கள். கைவசம் கடியில்லாதபோது சிறிது கதைக்கும் இடம் கொடுக்கிறீர்களா ?

இலவசக்கொத்தனார் said...

குட் ஒன்!

Maraboor J Chandrasekaran said...

நல்ல கற்பனை. நடையில் அதிகம் ஆங்கிலம் கலப்பதால், சிறிது ஓட்டம் தடைபடுகிறது. வார்த்தைகளை மாற்ற சிறிது முயலுங்கள். ஆக்கபூர்வமான பின்னுட்டமாகக் கருதுவீர்கள் என நம்பும்
மரபூர் ஜெய.சந்திரசேகரன்

பொன்ஸ்~~Poorna said...

Happy Birthday ;)

யோசிப்பவர் said...

கோவி.கண்ணன்,
//மிகப்பெரிய யோசனையாகவும், ஆழ்ந்த யோசனையாகவும் இருக்கிறது..//

அப்படியா???!!!;)

//கைவசம் கடியில்லாதபோது சிறிது கதைக்கும் இடம் கொடுக்கிறீர்களா//

கைவசம் கடியில்லையென்று யார் சொன்னது? அது ஒரு பக்கம்! இது ஒரு பக்கம்!!!;)))

யோசிப்பவர் said...

ஜெய. சந்திரசேகரன்,
//நடையில் அதிகம் ஆங்கிலம் கலப்பதால், சிறிது ஓட்டம் தடைபடுகிறது//
அது வேண்டுமென்றே செய்யப்பட்டதல்ல. இரு அலுவலக நண்பர்கள் பேசிக் கொள்ளும்பொழுது குறைந்த பட்சம் இவ்வளவு ஆங்கில கலப்போடுதான் நடைமுறையில் பேசிக்கொள்கிறோம். மேலும் அது இந்த கதைக்கு அவசியம் என்றே நான் கருதுகிறேன்(என்னுடைய அபிப்ராயம்தான்!;)). தங்கள் கருத்துக்கு நன்றி.;)

யோசிப்பவர் said...

செங்கமலம் ,
//போட்டி - மரணத்தை பற்றியல்லவா.. ஜனனத்தை பற்றியல்லவே//.
முதலில் இது போட்டிக்காக எழுதப் பட்ட கதையல்ல. ஏற்கனவே எழுதி வைத்திருந்தேன். இந்தக் கதையில் மரணத்தின் கூறும் இருப்பதாக நான் நினைத்ததால்தான் இதை போட்டிக்கு அனுப்பினேன். கருத்துக்கு நன்றி!!;)

யோசிப்பவர் said...

சிங்கை நாதன், இலவசக்கொத்தனார், ennamenathu,
அனைவருக்கும் நன்றி(கதையை பொறுமையாக படித்ததற்கு)!!!;)))

VSK said...

60.2 வரைக்கும் ஊகிக்க முடியாம ஜாலியாப் போச்சு!
நல்ல கற்பனை!
நடை எனக்குப் பிடித்திருந்தது!
ஸஸ்பென்ஸை தக்க வைத்தது!

யோசிப்பவர் said...

//இப்போதுதான் நெல்லை சிவாவின் கதை படித்தேன். அதே சிந்தனை ஒட்டிய பிரதிபலிப்பு,//

அந்த கதையை இதுவரையில் நான் படிக்கவில்லை!!!

யோசிப்பவர் said...

பொன்ஸ்,
//Happy Birthday ;)//

அது நான் இல்லை!;))

CA Venkatesh Krishnan said...

நல்லா இருக்கு. வாழ்த்துக்கள்