இந்த வலைத்துணுக்கிற்கு என்னப் பெயர் வைப்பது என்று யோசித்தபொழுது, சிலாக்கியமாக ஒன்றும் தோன்றாததால் 'கதை எழுதுகிறேன்' என்றே பெயர் வைத்துவிட்டேன். இதில் வரும் கதைகளை எல்லாம் நீங்கள் கதைகள் என்று ஒப்புக்கொள்வீர்களா என்று எனக்கு தெரியாது. ஆனால் இவையனைத்தும் எனது சொந்தக் கற்பனைகள் என்பதை இங்கே உறுதி கூறுகிறேன். இவற்றை யாராவது மறுபதிப்பிற்க்கோ, அல்லது வேறு எதற்காவது உபயோகப்படுத்த வேண்டும் என்றாலோ என்னிடம் அனுமதி பெற வேண்டும் என்று கூறிக் கொள்கிறேன்(என்ன இருந்தாலும் காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சல்லவா!!).
Friday, January 14, 2005
Subscribe to:
Post Comments (Atom)
10 comments:
//(என்ன இருந்தாலும் காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சல்லவா!!).
//
உண்மை!
//இதில் வரும் கதைகளை எல்லாம் நீங்கள் கதைகள் என்று ஒப்புக்கொள்வீர்களா என்று எனக்கு தெரியாது. //
ஒப்புக் கொள்கிறோமோ இல்லையோ! நீங்கள் கதை என்று எழுதினால் அது கதைதான்! கவலை(!?)ப் படாமல் எழுதுங்கள்.
//இந்த வலைத்துணுக்கிற்கு என்னப் பெயர் வைப்பது என்று யோசித்தபொழுது, சிலாக்கியமாக ஒன்றும் தோன்றாததால் 'கதை எழுதுகிறேன்' என்றே பெயர் வைத்துவிட்டேன். //
என்னிடம் யோசனை கேட்டிருந்தால்
"கதை விடுகிறேன்" என்று பெயர் சூட்டியிருப்பேன்.
:))
ச்சும்மா.. லுலூங்காட்டி!
சிபி,
//"கதை விடுகிறேன்" என்று பெயர் சூட்டியிருப்பேன்.//
:))))))))))))
பின்னூட்டமாய்ப் போட்டு வீணாக்கிட்டீங்களே!! கலாய்த்தலில் பதிவாவே போட்டிருக்கலாமே!!! :)))
ஏதோ தமிழ்மணம் சின்னதா தப்பு பண்ணி பழைய பதிவை காட்டிருச்சு. உடனே என்னைய வச்சு காமெடி பண்ணிடறதா?;)
//ஏதோ தமிழ்மணம் சின்னதா தப்பு பண்ணி பழைய பதிவை காட்டிருச்சு. உடனே என்னைய வச்சு காமெடி பண்ணிடறதா?;) //
காத்துகிட்டிருக்கம்ல!
:))
//காத்துகிட்டிருக்கம்ல!
//
எதுக்கு? தமிழ்மணம் தப்பு பண்றதுக்கா?;))
//எதுக்கு? தமிழ்மணம் தப்பு பண்றதுக்கா?;))
//
இல்லை! கலாய்க்குறதுக்கு யாராவது மாட்டுவாங்களான்னு!
அடடே. அப்ப நானும் கதை எழுத தொடங்கலாம் எண்டுறியள். உங்கடை கதையள் சில வாசித்து விட்டேன்.
//உங்கடை கதையள் சில வாசித்து விட்டேன்.//
பொறுமையாக தேடிப்பிடித்து வாசித்ததற்கு நன்றிக்கா!!
Post a Comment